யூடியூப் பார்த்து குழந்தைப் பெற்ற சிறுமி - தூக்கி வீசிய கொடூரம்!
யூடியூப் பார்த்து குழந்தைப் பெற்று தூக்கியெறிந்த சிறுமியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி கர்ப்பம்
மகாராஷ்டிரா, புனேயின் கோண்ட்வே துவாடே பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி. இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில், சிறுமியை பரிசோதித்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
அதனையடுத்து, மருத்துவர்கள் ஒலி முறை மருத்துவத்தை பரிந்துரைத்துள்ளனர். ஆனால், சிறுமியும், தாயும் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சில நாட்களில் சிறுமி யூடியூப் பார்த்து தனது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
தூக்கியெறிந்த கொடூரம்
அதோடு. குழந்தையை தான் வசிக்கும் கட்டடத்தின் அருகே தூக்கி எறிந்துள்ளார். அப்போது அந்த குழந்தையை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார் குழந்தையை மீட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அருகில் சிறுமி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சிறுமி யூடியூப் பார்த்து குழந்தை பெற்றதையும், அதை தூக்கி வீசியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
அதனையடுத்து, மகளிர் ஆணையம், சிறுமி மற்றும் அவர் தாய் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.