அடுத்தவர் மனைவி மீது காதல் - யூடியூப் பார்த்து வசிய பூஜை நடத்திய அரக்கன்!! என்ன நடந்தது தெரியுமா?
தெலுங்கானாவில், யூடிப்பை பார்த்து திருமணமான பெண்ணை காதலில் சிக்க வைக்க வசிய பூஜை நடத்திய ஒரு தலை காதல் மன்னன் போலீசில் வசமாக சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி நகரை சேர்ந்த முரளி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தினமும் இரவில் சில செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு காதல் வசனம் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த வகையில், அறிமுகமான நல்கொண்ட மாவட்டம் குண்டலப்பள்ளி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு மூன்று மாதங்களாக பேசி வந்துள்ளார் .
அந்த பெண்ணிடம் தன்னை ராம்சரண் ரேஞ்சுக்கு இருப்பேன் என்று கதை அளந்த முரளி நம் இருவரும் நேரில் சந்திக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இருவரும் நேரில் சந்தித்த போது அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது. திருமணம் ஆனாலும் பரவாயில்லை என்னுடன் வந்துவிடு என முரளி ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை மறுத்த அந்த பெண் முரளியை பிடிக்கவில்லை என கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் அந்த பெண்ணை வசியம் செய்ய திட்டமிட்ட முரளி, யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற வலைதளங்களில் உள்ள வீடியோக்களை பார்த்துவிட்டு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சென்றுள்ளான்.
அங்கு உள்ள மனித எலும்புகூடுகள் மற்றும் வசியத்திற்கு தேவையான பூஜை பொருட்களை எடுத்து சென்று அந்த பெண்ணின் வீட்டின் முன்பு இரவில் சூனிய பூஜை நடத்தி உள்ளான். அந்த பெண் காலையில் கதவை திறந்து பார்த்த போது வீட்டின் முன்பு பூஜை நடத்தியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணும், கிராம மக்களும்
சேர்ந்து அளித்த புகாரின் பேரில், போலீசார் முரளியை கைது செய்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.