நீங்க தான் எனக்கு மகனா பொறக்கணும் - நெகிழ்ச்சியில் புகழ்!
வடிவேல் பாலஜி குறித்து புகழ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புகழ் திருமணம்
குக்கு வித் கோமாளி புகழ் சமீபத்தில் அவருடைய காதல் மனைவி பென்ஸியாவை இந்து முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். பென்ஸியா இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர் என்பதால் இஸ்லாமிய முறைப்படியும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
சொந்த ஊரிலிருந்து பெரிய ஆள் ஆக வேண்டும் என்கிற கனவோடு இவர் போராடிக் கொண்டிருந்த சமயத்தில் இவருக்குப் பக்க பலமாக இருந்தவர்தான் வடிவேல் பாலாஜி. 'அது இது எது', 'சிரிப்புடா', 'கலக்கப்போவது யாரு' உட்பட பல மேடைகளில் வடிவேல் பாலாஜி,
வடிவேல் பாலாஜி
புகழுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் என்பதை பல இடங்களில் புகழ் சொல்லி இருக்கிறார். இந்நிலையில், இன்று வடிவேல் பாலாஜியின் திருமண நாள் குறித்து பதிவு ஒன்றை புகழ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், `இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் மாமா... உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்புறேன்.
எப்பவும் என் கூடத்தான் இருப்பீங்க.. கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்தக் கடவுளை வேண்டிக்கிறேன் மாமா!' என நெகிழ்ந்துள்ளார்.