10 அடி கூட நடக்க முடியாம...அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க ஜெயில்'ல..! புகழ்ந்து வேதனை..
சிறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்கொண்ட இன்னல்க்ளை குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்து பேசியது வைரலாகி வருகின்றது.
ஓபிஎஸ்
தேனியில் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடத்தினார். இதில், கலந்து கொண்ட ஓபிஎஸ் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பொறுப்பாளர்களுடன் விவாதித்தாக கூறப்படுகிறது.
ஆனால், நேற்றைய தினம் அதிமுக கட்சியின் கொடி, கரை வெட்டி, லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்தவும் ஓபிஎஸ்'ஸிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
10 அடி கூட..
. இதன் காரணமாக, ஓபிஎஸ் தரப்பின் அரசியல் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், தமிழகமெங்கும் அவர் தனது ஆதரவாளர்களை சந்தித்து, நாடாளுமன்ற தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றார்.
அந்த கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி பேசும் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்த போது, 10 அடிகள் கூட முழுவதுமாக நடக்க முடியாமல், பெரும் அவதியுற்றார் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.