ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சாகசம் செய்த புகழ் - அடுத்து இவரா?

Only Kollywood Viral Video Pugazh
By Sumathi 2 மாதங்கள் முன்

 ஹெல்மெட் அணியாமல் புகழ் பைக்கில் சாகசம் செய்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

புகழ்

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் புகழ். குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது. தன்னுடைய டைமிங் காமெடி சென்ஸ் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சாகசம் செய்த புகழ் - அடுத்து இவரா? | Pugazh Fame Who Rode A Bike Without A Helmet

அதனைத் தொடர்ந்து, அஜித், சூர்யா, சந்தானம் என முன்னணி நடிகர்களுடன் நடித்துவருகிறார். அடுத்ததாக Zoo Keeper என்னும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனிடையே இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார்.

பைக்கில் சாகசம்

இவர் சமீபத்தில் செய்த செயல் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பைக்கில் ஹெல்மெட் இல்லாமல் புகழ் சாகச பயணம் செய்துள்ளார். இதன் வீடியோவை தனது சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் தனது யமஹா பைக்கை சாலையில் ஓட்டி வருகிறார் நடிகர் புகழ்.

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சாகசம் செய்த புகழ் - அடுத்து இவரா? | Pugazh Fame Who Rode A Bike Without A Helmet

மங்கி குல்லா, முகக்கவசம் அணிந்துக் கொண்டு பயணம் மேற்கொள்கிறார். பின்னர் முக்கவசம், மங்கி குல்லாவை அகற்றிவிட்டு, கை விரலை உயர்த்தி காட்டி வாகனத்தை ஓட்டுகிறார். மீசையை முறுக்கிவிட்டு வேகமாக எதிரில் வரும் வேன் ஒன்றை கடந்து செல்கிறார்.

வழக்கு பதிவு? 

ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் ஜிபி முத்துவை வைத்து அபாயகரமாக பைக் ஓட்டிய டிடிஎப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து, ஜாமீனில் வெளியில் விட்டனர்.

இந்த சம்பவம் நிகழ்ந்து சில தினங்களிலேயே புகழ், ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியது கேள்விக்குள்ளாகியுள்ளது.