கேவலமா பேசுறாரு.. மாணவியிடம் எல்லை மீறிய ஆசிரியர் - லீக்கான ஆடியோ!
கல்லூரி பேராசிரியர், மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் கொடுமை
புதுக்கோட்டையில் உள்ள அரசு கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவி ஒருவர் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அதே காலேஜில் படிக்கும் ஒரு மாணவரை காதலிக்கிறார். இதனிடையே, இந்த மாணவியை, அதே பேராசிரியராக பணிபுரியும் ஒருவர், செல்போனில் ஆபாசமாக பேசி தனிமையில் அழைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். உடனே மாணவியின் உறவினர்கள் சிலர், கல்லூரிக்கு சென்று சம்மந்தப்பட்ட பேராசிரியரின் பைக்கை சரமாரியாக அடித்து நொறுக்கியுள்ளனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கல்லூரி நிர்வாகம் சமாதானம் செய்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி தெரிவித்தனர்.
கதறிய மாணவி
அதனையடுத்து, போலீஸில் புகாரளித்ததில் பல மாணவிகளிடம் தவறாக பேசியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேராசிரியர்கள் கொண்ட குழுவும் விசாரித்து வருகிறது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவி தன்னுடைய சக தோழியிடம் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், மாணவி ஆசிரியர் தன்னை தனிமைக்கு அழைப்பதாகவும், தன்னை யூஸ் பண்ணிக்கோ எனக் கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சக மாணவியை ஆசிரியர் தவறாக பார்த்ததாகவும் கூறியுள்ளார்.