இதுக்கா உங்களை... முதலமைச்சரை ஆபாசமாக பேசிய நபர் - தட்டித்தூக்கிய போலீஸ்
முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக பிரமுகர்
சென்னை, திருநின்றவூர் கொட்டமேடு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி(32). இவர் பாஜக பிரமுகர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் முதலமைச்சர் மற்றும் பட்டியலின சமூகத்தினர் குறித்து ஆபாசமாக பேசி இணையத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
அந்த வீடியோ வேகமாக பரவியது. தொடர்ந்து, இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். ஆவடியில் தலைமறைவாக இருந்த பூபதியை கைது செய்தனர்.
ஆபாச பேச்சு
மேலும், விசாரணையில் மது போதையில் அவ்வாறு பேசி வீடியோ வெளியிட்டதாக தெரிவித்துள்ளார். அதனையடுத்து அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பூபதி அந்த வீடியோவில், ராணுவமே வந்தாலும் என்னை ஒன்னும் பண்ன முடியாது.
நாயோட சோலி முடிஞ்ச் ...
— ஜெயசந்திரன் திமுக ?♥️ (@jaya2017maha) November 5, 2022
??? pic.twitter.com/qzX0QcgZ7Q
என் உறவுக்கார பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வாலிபரோடு காதலித்து வீட்டை விட்டு ஓடிவிட்டாள். என் சமூகத்தை சேர்ந்த பெண்கள் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களை காதலித்து ஓடி போகவா உங்களை முதலமைச்சராக ஆக்கியுள்ளோம். உன்னை முதல்வர் பதவியில் இருந்து நீக்குகிறேன் என பேசியுள்ளார்.