பால் கூட காச்சல...சீட்டுக்கட்டு போல சரிந்த 3 மாடி வீடு..கதறிய குடும்பத்தார்..!
புதியதாக கட்டப்பட்ட 3 மாடி கட்டிடம் சரிந்தது சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 அடுக்கு கட்டிடம்
புதுச்சேரி மாநிலம் ஆட்டுப்பட்டியில் புதிய பேருந்து நிலையத்திற்க்கும் காமராஜர் சாலைக்கும் இடையே உப்பானார் வாய்க்கால் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் கட்டும் பணி 10 ஆண்டுகாக முடங்கி கிடந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
இதற்காக வாய்க்கால் அகழப்படுத்த தோண்டிய போது அருகில் இருந்த 3 அடுக்கு கட்டிடம் விரிசல் ஏற்பட்டு சரிந்து விழுந்தது. இந்த வீடு வரும் பிப்ரவரி 11-இல் கிரக பிரேவஷத்திற்க்கு தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சாலை மறியல்
இச்சம்பவம் குறித்து அறிந்த பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன் நேரில் வந்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்வு குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் இதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதிய பேருந்து நிலையம் முதல் சட்டமன்றம் செல்லும் சாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாரிகள் மற்றும் போலிசாரின் பேச்சுவார்த்தைக்கு பின் இந்த மறியல் கைவிடப்பட்டது.
பொதுபணித்துறை அதிகாரி அப்பகுதியில் இருந்து மக்களை அப்புறப்படுத்து படியும், தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கும் படியும் கூறியுள்ளார்.