நிலத்திற்கு அடியில் வீடு; அதுவும் பிரம்மாண்டமாக வாழும் மக்கள் - என்ன காரணம்?
நிலத்திற்கு அடியில் கட்டப்பட்டுள்ள வீடுகள் கவனம் பெற்றுள்ளது.
பெர்பர் இன மக்கள்
வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவைச் சேர்ந்தவர்கள் பெர்பர் இன மக்கள். அரபு மொழி பேசுகின்றனர். டிஜெபல் தஹார் பிராந்தியத்தின் வறண்ட பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள நிலப்பரப்பில் தான் இந்த நகரம் அமைந்துள்ளது.
இவர்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். அவர்கள் அரேபியாவில் இருந்து துனிசியா நாட்டிற்கு குடிபெயர்ந்த போது மட்மதாவில் உள்ள வறண்ட நிலத்தில் வெப்பத்தில் வாழ முடியாத காரணத்தால் இங்குள்ள நிலத்தின் அடியில் மண்ணை தோண்டி வாழத் தொடங்கினர்.
ட்ரோக்ளோடைட்(troglodyte)
மென்மையாக இருக்கும் மணற்கல்லில் முதலில் ஆழமான வட்டக் குழியைத் தோண்டி வீடுகள் கட்டுகின்றனர். குகையின் விளிம்புகளைச் சுற்றி தோண்டப்பட்டு, நிலத்தடி அறைகளை உருவாக்கி வீட்டின் அமைப்பை ஏற்படுத்துகின்றனர்.
இந்த தனித்துவமான ட்ரோக்ளோடைட்(troglodyte) கட்டுமானமானது பகலில் வெப்பத்திலிருந்து தப்பிக்க உதவியுள்ளது. இந்த வீட்டில் ஒவ்வொரு கொல்லைப்புறமும் ஒரு முற்றத்துடன் இணைகிறது.
அது தான் இந்த வீட்டிற்கு வெளியில் இருந்து காற்றைக் கொண்டுவருகிறது.
துனிசியா ஜனாதிபதி ஹபீப் போர்குய்பா நாட்டை நவீனமயமாக்க முயன்றதில், அந்த மக்கள் பல வசதிகளை பெற்றுள்ளனர்.