நிலத்திற்கு அடியில் சுரங்க வீடு; நிம்மதியான வாழ்க்கை..டிவி கூட இருக்கு - ஏன் இப்படி வாழ்கிறார்கள் தெரியுமா?

World Tunisia
By Jiyath Sep 16, 2023 07:09 AM GMT
Report

நிலத்திற்கு அடியில் சுரங்க வீடு அமைத்து வாழும் மக்கள் குறித்த தகவல்.

மட்மதா நகரம்

வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அரபு மொழி பேசும் பெர்பர் இன மக்கள் வாழும் 'மட்மதா' (matmata) ஒரு சிறிய நகரம் உள்ளது. தெற்கு துனிசியாவின் டிஜெபல் தஹார் பிராந்தியத்தின் வறண்ட பள்ளத்தாக்குகளின் நிலப்பரப்பில் இந்த நகரம் அமைந்துள்ளது.

நிலத்திற்கு அடியில் சுரங்க வீடு; நிம்மதியான வாழ்க்கை..டிவி கூட இருக்கு - ஏன் இப்படி வாழ்கிறார்கள் தெரியுமா? | People Live Underground In This Tunisia Village

பெர்பர் இன மக்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். அரேபியாவில் இருந்து துனிசியா நாட்டிற்கு குடிபெயர்ந்த போது மட்மதாவில் உள்ள வறண்ட நிலத்தில் வெப்பத்தில் வாழ முடியாத காரணத்தால் இங்குள்ள நிலத்தின் அடியில் மண்ணை தோண்டி மக்கள் வாழத் தொடங்கினர்.

நிலத்திற்கு அடியில் சுரங்க வீடு; நிம்மதியான வாழ்க்கை..டிவி கூட இருக்கு - ஏன் இப்படி வாழ்கிறார்கள் தெரியுமா? | People Live Underground In This Tunisia Village

அவர்கள் தோண்டக்கூடிய அளவுக்கு மென்மையாக இருக்கும் மணற்கல்லில் எளிய கைக்கருவிகளை கொண்டு முதலில் ஆழமான வட்டக் குழியைத் தோண்டி வீடுகள் கட்டுகின்றனர். பின்னர் குகையின் விளிம்புகளைச் சுற்றி தோண்டி, நிலத்தடி அறைகளை உருவாக்கி வீட்டின் அமைப்பைக் கொண்டு வருகின்றனர்.

மருத்துவ உலகில் புதிய சாதனை - மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் - எப்படி சாத்தியம்?

மருத்துவ உலகில் புதிய சாதனை - மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் - எப்படி சாத்தியம்?

நிலத்தடி வீடு

பகலில் வெப்பத்திலிருந்து தப்பிக்க இந்த தனித்துவமான ட்ரோக்ளோடைட்(troglodyte) கட்டுமானமானது அவர்களுக்கு உதவியுள்ளது. ஆனால் 1960ம் ஆண்டுகளில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் நிலத்தடி குடியிருப்புகள் கொஞ்சம் சேதமடைந்துள்ளது.

நிலத்திற்கு அடியில் சுரங்க வீடு; நிம்மதியான வாழ்க்கை..டிவி கூட இருக்கு - ஏன் இப்படி வாழ்கிறார்கள் தெரியுமா? | People Live Underground In This Tunisia Village

இருப்பினும் இன்றைய சூழலில் இந்த வீடுகள் அனைத்து நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  இந்த வீட்டில் ஒவ்வொரு கொல்லைப்புறமும் ஒரு முற்றத்துடன் இணைகிறது. இந்த முற்றம் மிக முக்கியமானது. ஏனென்றால் அது தான் காற்றை, இந்த வீட்டிற்கு வெளியில் இருந்து கொண்டுவருகிறது.

நிலத்திற்கு அடியில் சுரங்க வீடு; நிம்மதியான வாழ்க்கை..டிவி கூட இருக்கு - ஏன் இப்படி வாழ்கிறார்கள் தெரியுமா? | People Live Underground In This Tunisia Village

மேலும், குடும்ப உறுப்பினர்கள் வேலைகளைச் செய்வதற்கும் சமூக ரீதியாக இணைவதற்கும் இது ஒரு மைய இடமாக இருக்கிறது. துனிசியா நாட்டின் ஜனாதிபதி ஹபீப் போர்குய்பா நாட்டை நவீனமயமாக்க முயன்ற போது இந்த நகரமும் அங்குள்ள பெர்பர் மக்களும் பல புதிய வசதிகளை பேருள்ளனர்.

நிலத்திற்கு அடியில் சுரங்க வீடு; நிம்மதியான வாழ்க்கை..டிவி கூட இருக்கு - ஏன் இப்படி வாழ்கிறார்கள் தெரியுமா? | People Live Underground In This Tunisia Village

ஸ்டார் வார்ஸின் ( star wars ) லூக் ஸ்கைவால்கரின் (Luke Skywalker) வீட்டின் இருப்பிடங்கள் எல்லாம் இந்த துனிசியாவின் மட்மதா நகரத்தில்தான் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.