காய்ச்சல் எதிரொலி - புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை!
புதுச்சேரியில் பரவும் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃப்ளூ காய்ச்சல்
புதுச்சேரியில், ஃப்ளூ காய்ச்சல் எனும் வைரஸ் தற்போது வேகமாக வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் சிறுவர்களின் எண்ணிக்கையே அதிகமாக காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை பரிந்துரைந்திருந்தது.
பள்ளிகளுக்கு விடுமுறை
அதன் அடிப்படையில், புதுச்சேரியில் பரவி வரும் காய்ச்சலை கருத்தில் கொண்டு சுகாதாரத் துறை அறிவுறுத்தலின் பேரில் நாளை முதல் வருகிற 25-ஆம் தேதி வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில கல்வித் துறை அறிவித்துள்ளது.