சிறுமி விசாரணையில் அலட்சியம்..? கூண்டோடு போலீசாரை தூக்கிய முதல்வர்..!
புதுச்சேரி சிறுமி விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சிறுமி விவகாரம்
புதுச்சேரி மாநிலத்தில், 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான செய்தி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் கருணாஸ், விவேகானந்தன் என இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கூண்டோடு
நேற்றைய தினம் குழந்தையின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, 20 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் சிறுமி உடலை பெற்றோர்கள் பெற்று கொண்டனர்.
இந்த சூழலில் தான், குழந்தையின் விசாரணையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் துறையினர் அலட்சியம் காட்டியதாக அவர்களை கொண்டது கூண்டோடு மற்றும் படி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.