ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!
அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5000 வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல்
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் அதி கனமழை பெய்தது. அதிகபட்சமாக விழுப்புரம், மயிலத்தில் 51 செ.மீ மழை பதிவானது. அடுத்தப்படியாக புதுச்சேரியில் 48.4 செமீ மழை பதிவானது.
புதுச்சேரியில் 4,000 ஊழியர்கள் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அதி கனமழையில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் மாயமாகி உள்ளனர். இதற்கிடையில் முதல்வர் ரங்கசாமி கனமழை சேதங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
நிவாரணம் அறிவிப்பு
அப்போது பேசிய அவர், நமது அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அனைத்து ஊழியர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். கனமழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் 10,000 ஹெக்டர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. விவசாயிகளின் துயரத்தை போக்குவிதமாக ஒரு ஹெக்டருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்க அரசு முடிவு செய்யப்பட்டது. கனமழையினால் இறந்த கால்நடைகளில் பசுமாடு ஒன்றுக்க ரூ.40,000.
கிடாறி கன்றுகளுக்கு ரூ.20,000, சேதமழைந்த படகு ஒன்றுக்கு ரூ.10,00 இழப்பீடு வழங்கப்படும். கூரை வீடு ஒன்றுக்கு ரூ.10,000, உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.