இனி ரிசர்வேஷனுக்காக காத்திருக்க வேண்டாம் - ரயில்வேவின் அசத்தல் திட்டம்!
ரயில்வே துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்பதிவு
ரயில்களில் இரண்டாம் வகுப்பு மற்றும் ஏசி பெட்களில் முன்பதிவு செய்திருந்தாலும் போதுமளவிற்கு பொதுப்பெட்டி இணைக்கப்படாத காரணத்தால் அங்கு வடமாநிலத்தவர்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
இதனால் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் அவதி அடைந்து வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனையடுத்து பயணிகள் வசதிக்காக புதிய திட்டத்தை ரயில்வே துறை முன்னெடுத்துள்ளது.
ரயில்வே திட்டம்
அதன்படி, கடந்த ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 229 ரயில்களில் 583 புதிய பொதுப் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அதிகரிக்கும் வகையில் நவம்பர் மாதத்திற்குள் 370 வழக்கமான ரயில்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுப் பெட்டிகளை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு ரயில் எந்த வித சிரமமும் இல்லாமல் பயணிக்க வாய்ப்பு உருவாகும்.
அடுத்த 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் பொது பெட்டிகளை ரயில்களில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தபட்சம் 4 பொதுப் பெட்டிகள் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.