ஸ்லீப்பர் பஸ்ஸில் சில்மிஷம் - தர்ம அடி வாங்கிய இளைஞன்!

Sexual harassment Puducherry
By Vinothini May 07, 2023 06:09 AM GMT
Report

தனியார் பேருந்தில் தன் காதலியுடன் பயணித்த இளைஞன் வேறு பெண்ணிடம் சில்மிஷம் செய்து அடிவாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

தனியார் பேருந்து

சென்னை போன்ற நகரங்களில், வெளியூர் செல்வதற்காக தனியார் பேருந்துகள் இயங்கி வருகிறது. அந்த வகையில், புதுவையில் இருந்து பெங்களூருக்கு சென்ற பேருந்தில் ஒரு ஜெர்மன் பெண் பயணித்துள்ளார். இவர் திண்டிவனத்தில் வசித்து வருகிறார்.

pudhucherry-bus-issue-youngster-tried-to-misbehave

இவர் பெங்களூர் சென்று கொண்டிருந்தார் , அவர் படுக்கைக்கு பக்கத்து படுக்கை காலியாக இருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு இளைஞன் அவர் பக்கத்துக்கு படுக்கையில் படுத்தார்.

அந்த சீட்டிற்கு உரிய நபர்தான் வந்து விட்டார் என்று நினைத்து அவரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

சிறிது நேரத்தில் அந்த இளைஞன் தனது சில்மிஷத்தை தொடங்கியுள்ளார், திடீரென அந்த பெண்ணை கட்டிப்புடித்து பாலியல் தொந்தரவு கொடுக்க முயற்சித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டு கத்தியுள்ளார்.

அடித்து வெளுத்த பயணிகள்

இந்நிலையில், அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பஸ்சின் உதவியாளர் உள்ளே வந்து பார்த்துள்ளார். அப்போது நடந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட பெண் கூறியதும் பஸ்சின் ஒட்டுநரும், உதவியாளரும் அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கினர்.

ஸ்லீப்பர் பஸ்ஸில் சில்மிஷம் - தர்ம அடி வாங்கிய இளைஞன்! | Pudhucherry Bus Issue Youngster Tried To Misbehave

இத்தனைக்கும் அந்த இளைஞரின் காதலியும் அதே பேருந்தில் அவருடன் வந்துள்ளார். அவரின் காதலி பெண்ணுக்கு நடந்த சம்பவத்தை கண்டிக்காமல் தனது காதலனுக்கு ஆதரவாக பேசியுள்ளார்,

அதனால் அவருக்கும் கணத்தில் அறை விழுந்தது. மேலும், அவர்களை பஸ் ஊழியர்கள் நடு வழியில் இறக்கி விட்டனர்.

இந்த சம்பவத்தை அங்கு பயணித்த சக பயணியர் வீடியோ எடுத்துள்ளார், அது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து, உருளையன் கோட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து அந்த இளைஞனை கைது செய்தனர்.