பொறியியல் மாணவர் சேர்க்கை - தரவரிசை பட்டியல் வெளியீடு

Tamil nadu Anna University K. Ponmudy
By Sumathi Aug 16, 2022 07:14 AM GMT
Report

 அமைச்சர் பொன்முடி பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டார்.

பொறியியல் கலந்தாய்வு

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20ம் தேதி முதல் தொடங்குகிறது. ஆகஸ்ட் 20 முதல் 23 வரை முதற்கட்ட, சிறப்பு பிரிவு இட ஒதுக்கீடு கலந்தாய்வு, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு வீரர்கள்,

பொறியியல் மாணவர் சேர்க்கை - தரவரிசை பட்டியல் வெளியீடு | Publication Of Rank List For Engineering Courses

7.5% அரசுப் பள்ளி ஒதுக்கீடு மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கி அக்டோபர் 21ம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தரவரிசைப் பட்டியல் 

மூன்று பாடநெறிகளை அடிப்படையாக கொண்டுதான் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியல் 200 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். அதில் கணித பாடநெறிகளுக்கு 100 மதிப்பெண்களும், இயற்பியல் பாடநெறிகளுக்கு 50 மதிப்பெண்களும், வேதியல் பாடநெறிகளுக்கு 50 மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளன.

பொறியியல் மாணவர் சேர்க்கை - தரவரிசை பட்டியல் வெளியீடு | Publication Of Rank List For Engineering Courses

மாநிலத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம்‌, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும்

இணையதளம் 

மத்திய கல்வி நிறுவனங்கள் ஒற்றை சாளரை சேர்க்கை முறையில் 2022 பொறியியல் மாணவர்கள் சேர்க்கை ஒப்படைத்த இடங்களில் நடைபெறுகிறது. 2022-23 கல்வியாண்டில், பொறியியல் பட்ட படிப்பிற்காக அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2.10 லட்சமாக உள்ளது.

அதில் 1.95 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சுயநிதி பொறியியல் கல்லூரியாக உள்ளது. அதில் 90,000 இடங்கள் அதாவது 55-60%இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2000க்கும் மேற்பட்ட இடங்களும்,

அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 10,000க்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளது. www.tndte.gov.in அல்லது www.tneaonline.org என்ற இணையப் பக்கத்தில் பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பக்கத்தின் மூலம் தரவரிசை பட்டியலை தெரிந்துகொள்ளலாம்.