மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - இனி தாய் மொழியிலேயே பொறியியல் பாடங்களை கற்கலாம் - இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி!
பொறியியல் படிப்பை இனி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 7 மொழிகளில் வரும் கல்வியாண்டு முதல் கற்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்திய நாட்டில் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ஆங்கிலத்தில் மட்டும் தான் பொறியியல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களின் தாய் மொழிகளில் பொறியியல் படங்கள் நடத்துவது கிடையாது.
இதனால், தாய் மொழியில் பயின்ற மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதில் பெரும் சிரமப்பட்டு வந்தனர். ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க முடியும் என்ற நிலை இருந்ததால் கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதில் தயக்கம் காட்டினர்.
இதனையடுத்து, மாணவர்களின் நலன் கருதி தமிழ், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் ஆகிய 7 மொழிகளில் பொறியியல் பாடங்களை கற்க இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இனிமேல், தாய் மொழியிலேயே பொறியியல் பாடங்களை கற்றுக்கொள்ளலாம். பொறியியல் பாடங்களை அந்தந்த பிராந்திய மொழிகளில் மாற்றம் செய்யவும், 11 இந்திய மொழிகளில் பயில அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் திட்டமிட்டிருக்கிறது.