மிரட்டும் மிக்ஜாம் புயல்...தத்தளிக்கும் சென்னை – பொது விடுமுறை அறிவிப்பு!
அரசு அலுவலகங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்த நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
மிரட்டும் மிக்ஜாம் புயல்
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை அறிவிப்பு
புயல் காரணமாக அரசு அலுவலகங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்த நிலையில் இன்றும், நாளையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Hearing this is Velachery lake? #ChennaiRains stay safe people ??? pic.twitter.com/JkKpLgxMmR
— Memer Aspirant (@MemerAspirant) December 4, 2023