10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வு முடிவு
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து மார்ச் 4-ம் தேதி தொடங்கிய 11-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு 25-ம் தேதி முடிவடைந்தது.
அதேபோல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கடந்த மார்ச் 26 தொடங்கி ஏப். 8-ம் தேதி முடிந்தது. இதை தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி முடிந்து தற்போது மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
முக்கிய அறிவிப்பு
இந்த பணிகள் ஓரளவுக்கு முடிவடையும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மக்களவைத் தேர்தல் காரணமாக தமிழ்நாட்டில் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என வதந்தி பரவிய நிலையில்,
எந்த மாற்றமுமில்லாமல் ஏற்கெனவே அறிவித்தபடியே 10,11,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. வழக்கம்போல் தேர்வு முடிவுகளை வீட்டில் இருந்தபடியே மாணவ-மாணவிகள் செல்போன் மற்றும் இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.