பொதுத்தேர்வு மையங்களில் மின்சாரம் தடைப்பட கூடாது - மின்சார வாரியம் உத்தரவு

Government of Tamil Nadu
By Thahir Mar 11, 2023 06:19 AM GMT
Report

பொதுத்தேர்வு நடக்கும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மின்வாரியம் உத்தரவு 

12-ம் வகுப்புக்கு வரும் 13-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு 14-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 6-ம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன.

இந்த நிலையில், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியரும் தேர்வறையில் செல்போன் வைத்திருக்க அனுமதி இல்லை என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்து இருந்தது. 

There should be no power cut in public examination centres

இந்த நிலையில், இன்று பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்வெழுதும் போது மின் தடை ஏற்படக் கூடாது

மேலும், மாணவர்கள் தேர்வெழுதும்போது மின் தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

மாணவர்கள் படிக்க ஏதுவாக இரவு நேரங்களில் மின்தடை செய்யக்கூடாது என்றும், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவற்றில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனை உடனே சரி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.