மீண்டும் பாஜக வந்தால் இந்த தொழிலே அழிஞ்சிடும் - அமைச்சர் பிடிஆர் எச்சரிக்கை
தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுகவினர் மும்முரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
திமுக பிரச்சாரம்
நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு முக்கிய பலமாக இருக்கின்றது திமுக. மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் ஆதரவை அளித்து வருகின்றது.
திமுகவின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினில் துவங்கி தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிடிஆர் எச்சரிக்கை
மதுரை மதுரை மாவட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஐடி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் ஆற்றிய சிறப்புரை வருமாறு, கேபிள் டிவி தொழிலை செய்ய விடாமல் மத்திய அரசு பல இடஞ்சல்களை செய்தாலும் அதனை வழக்குகள் தொடுத்தால் வெல்ல முடியும்.
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை வைத்துக்கொண்டு 2 மாதத்தில் கேபிள் டிவி தொழிலை பாஜக அழித்து விடுவார்கள்.
ஆகவே, உங்கள் தொழிலை பாதுகாத்துக்கொள்ள வரும் தேர்தல்களில் இந்தியா கூட்டணிக்கு நீங்களும் வாக்களியுங்கள் - வாக்கும் சேகரியுங்கள். அப்போது தான், அரசு கேபிள் டிவி வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.