நீண்ட நாள் பிரச்சனை -பிரச்சாரத்தில் வாக்குறுதி கொடுத்த கதிர் ஆனந்த்!!
நடைபெறும் மக்களவை தேர்தலில் மீண்டும் திமுக வேட்பாளராக களமிறங்குகிறார் கதிர் ஆனந்த்.
கதிர் ஆனந்த்
திமுகவின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், கடந்த முதல் முறையாக 2019-ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.
அதனை தொடர்ந்து அவருக்கு தற்போது 2-வது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், மக்களிடம் 10 ஆண்டு பாஜக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்.
வாக்குறுதி
இந்த சூழலில் தான் தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டு, பத்தலப்பள்ளி பகுதிகளில் அவர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது, பத்தலப்பள்ளி பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான பத்தலப்பள்ளி அணை, பத்தலப்பள்ளி ஆற்று தரைப்பாலம் கட்டி தரப்படும் என கதிர் ஆனந்த் உறுதியாக தெரிவித்துள்ளார்.