தொடர் ஆடியோ லீக் - சபரீசன் குறித்து பிடிஆர் சொன்ன முக்கிய தகவல்
அண்ணாமலை வெளியிட்ட பிடிஆர் லீக்ஸ் ஆடியோ முற்றிலும் போலியானது என பிடிஆர் தெரிவித்துள்ளார்.
ஆடியோ லீக்
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. இதனை சவுக்கு சங்கரும், இரண்டாவது ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் வெளியிட்டனர். அதில், உதயநிதி குறித்து சபரீசன் குறித்து பிடிஆர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து பேசிய பிடிஆர், இது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்ட ஆடியோ என்றும், இந்த ஆடியோ தான் பேசியது அல்ல. பொய்யான ஆடியோ. அண்ணாமலை தரம் தாழ்ந்து பகிர்ந்துள்ளார் என்றும் கீழ்தரமானது என்று தெரிவித்துள்ளார்.
பிடிஆர் விளக்கம்
தொடர்ந்து, எங்களது நம்பிக்கை நட்சத்திரமான மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளார். இதைப் பார்த்து அவரை அமைச்சராக்க வேண்டும் என்று தலைவரிடம் வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். அவ்வாறு இருக்கையில் நான் ஏன் அவர்களைப் பற்றி தவறாக பேசவேண்டும்?

மேலும், நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், உறுதுணையாகவும் இருப்பவர் திரு. சபரீசன் அவர்கள். எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி மற்றும் சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. எனவே, அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.
இவர்களிடம் இருந்து என்னைப் பிரிப்பதன் மூலமாக தங்களது அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு பிளாக் மெயில் கும்பல். ஆனால் இது போன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என விளக்கமளித்துள்ளார்.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan