அமைச்சர் பிடிஆர் என் செருப்புக்கு கூட நிகரில்லை : கொந்தளித்த அண்ணாமலை

DMK BJP K. Annamalai Palanivel Thiagarajan
By Irumporai Sep 01, 2022 03:34 AM GMT
Report

தமிழகத்தின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது மதுரை விமான நிலையத்தில் செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில் , இந்த சம்பவத்திற்கு காரணமான பாஜகவை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இது தொடர்பாக அண்ணாமலை பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. ஆனால் அது ஆடியோவை எடிட் செய்யப்பட்டது என்று தமிழக பாஜகவினர் தெரிவித்தனர்.

செருப்புககு கூட பிடிஆர் நிகர் இல்லை

இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னோர்களின் பெயரைக் கொண்டு பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் அவரது கூட்டமும் வாழ்கின்றனர்.

தானாக உருவாகியிருக்கும் ஒரு விவசாயின் மகனை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெரிய பரம்பரையில் வெள்ளி கரண்டியுடன் பிறந்ததைத் தவிர இந்த ஜென்மத்தில் வேறு எதையும் பி டி ஆர் செய்யவில்லை.

அவர் அரசியலுக்கும் மாநிலத்திற்கும் சாபக்கேடு. இல்லாத ஒன்றை இட்டுக்கட்டும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளவிற்கு தரம் தாழ விரும்பவில்லை. தனது செருப்புககு கூட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிகர் இல்லை என்று பதிவிட்டார்.

அண்ணாமலை பாஜகவின் சாபம் 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தனது ட்விட்டர் பதிவில்:

நான் ஏன் ?பெயரைக் கூட சொல்ல மாட்டேன்? தியாகியின் உடலைப் பார்த்து விளம்பரம் தேடுவது அமைச்சரின் காரில் செருப்பு வீசுவது இத்தகைய கீழ்த்தரமான அண்ணாமலையும் , மனநலம் குறித்து உயர் நீதிமன்றத்தால் கேள்வி எழுப்பப்பட்ட மற்றொரு நபரும் தான்.

தமிழ் சமூகத்தின் மீதான சாபக்கேடு. ஆனால் இந்த சாபம் பாஜகவின் மீது தான் என்றும் பதிவிட்டுள்ளார்.