ஆழம் பார்த்தார்..! மோடி - பிடிஆர் சந்திப்பு - அதிமுக ஜெயக்குமார் கருத்து..!
அமைச்சர் பிடிஆர் பிரதமர் மோடியை சந்தித்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிடிஆர் - மோடி
சந்திப்பு கடந்த 27,28-ஆம் தேதிகளில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை தமிழக ஐ.டி துறை அமைச்சர் பிடிஆர் சந்தித்துள்ளது தொடர்பான புகைப்படங்கள் வெளிவந்து பெரும் சலசலப்புகளை தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், இது தனிப்பட்ட ரீதியிலான சந்திப்பு ஏதும் இல்லை என்றும் அரசியல் ரீதியில் நடத்தப்பட்ட சந்திப்பு தான் என அழுத்தமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆழம் பார்க்கவே
இது குறித்தாக பல்வேறு தலைவர்களும் கருத்துக்களை பகிர்ந்து வரும் சூழலில், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, பிடிஆர் ஆடியோ வெளியானதை அடுத்து அமைச்சர் இலாகா மாற்றப்பட்டதற்கு அதிருப்தியில் இருக்கும் பிதிர் பாஜகவுடான உறவின் ஆழம் பார்க்கவே இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என்று தெரிவித்தார்.