பிரதமர் மோடியை ரகசியமாக சந்தித்தாரா அமைச்சர் பிடிஆர்? பின்னணி இதுதான்!
பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.
பிரதமர் மோடி
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கடந்த 27-ம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடி பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் மதுரைக்கு சென்று இரவு 8 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.
இதனையடுத்து மதுரையில் உள்ள பசுமையை ஓட்டலில் தங்கி விட்டு மறுநாள் தூத்துக்குடி சென்றார். மதுரையில் பிரதமர் மோடியை மாநில அரசு சார்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வரவேற்று சால்வை அணிவித்திருந்தார். இந்நிலையில் மதுரை பசுமலையில் தங்கியிருந்த பிரதமர் மோடியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரகசியமாக சந்தித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிடிஆர் விளக்கம்
இந்த சந்திப்பில் பிரதமர் மோடியுடன் 10 முதல் 15 நிமிடங்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் பி.டி.ஆர் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், பிரதமர் மோடிக்கும் எனக்கும் தனி உறவு உள்ளதுபோல் போலி செய்தியை பரப்புகின்றனர். முதல்-அமைச்சர் வழங்கிய அரசாங்க பணியைதான் நான் செய்தேன். அரசாங்க பணியின் காரணமாகவே பிரதமரை சந்தித்தேன். தனிப்பட்ட விருப்பத்திற்காக அல்ல" என்று தெரிவித்துள்ளார்.