பற்றி எரியும் நாடு; 144 தடை, இல்லம் சூறை - உணவு, மயில்களை தூக்கிச்சென்ற கொடுமை
பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெடிக்கும் போராட்டம்
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவி விலகினார். நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்பே இம்ரான் கான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது.

இந்நிலையில், ஆளும் கட்சிக்கு எதிராக இம்ரான் போராட்டங்களை நடத்தி வந்தார். சமீபத்தில் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அது பெரும் பரபரப்பை கிளப்பியது. இவர் மீது, பாகிஸ்தானில் பிரச்சாரத்தின்போது நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், போலீசாருக்கும் மிரட்டல் விடுத்த வழக்கு,
சூறையாடல்
பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது வெளிநாட்டுப் பயணத்தில் முக்கியப் பிரமுகரிடமிருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்த்த வழக்கு என 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக இம்ரான் கான் இஸ்லாமாபாத் வந்தார். அப்போது அவரை அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பி.டி.ஐ கட்சியினர் லாகூரில் உள்ள ராணுவ கமாண்டர் இல்லத்திற்குள் நுழைந்து கேட் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
மேலும், உள்ளே புகுந்து சூறையாடியதோடு, அங்கிருந்த உணவுப் பொருட்களையும் கைப்பற்றி உண்டனர். அங்கிருந்த மயில்களை உயிரோடு பிடித்துச் சென்றனர்.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan