ஈஷாவுக்கு வருகை தரும் திரெளபதி முர்மு; வலுக்கும் எதிர்ப்பு - ஏன்?
ஈஷா மையத்திற்கு ஜனாதிபதி வர எதிர்ப்பு தெரிவித்து பெரியார் திகவினர் போராட்டம் நடத்தினர்.
திரெளபதி முர்மு
ஜனாதிபதி திரெளபதி முர்மு முதல் முறையாக தமிழ்நாடு வருகை தர உள்ளார். தொடர்ந்து, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். இதனிடையே கோவை ஈஷா மையத்துக்கு ஜனாதிபதி வருகை தர எதிர்ப்பு தெரிவித்து கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் தி.க.வினர் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து நிர்வாகிகள், மேற்கு தொடர்ச்சி மலையை, யானை வழித்தடங்களை பழங்குடி மக்களின் வாழ்வை, விவசாய நிலங்களை சூறையாடி யோகா என்ற பெயரில் பல உயிர்களை காவு வாங்கியும், பல மர்ம மரணங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஈஷா யோகா மையத்திற்கு நாட்டின் உயரிய பதவியில் உள்ள அதுவும்
எதிர்ப்பு
பழங்குடி மக்களின் பிரதிநிதியாக அடையாளம் காட்டப்பட்ட ஜனாதிபதி வருகை தருவது மிகுந்த வேதனைக்குரியது கண்டனத்துக்குரியது . அவர்கள் செய்யும் சட்ட விரோதமான செயல்களுக்கு அரசே அங்கீகாரம் வழங்குவது போன்று அமைகிறது.
ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்க கூடாது எனத் தெரிவித்தனர். மேலும், பல்வேறு கட்சிகள் இணைந்து ஜனாதிபதிக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் நிர்வாகிகள் இணைந்து கொண்டனர்.