ஜனாதிபதி திரெளபதி முர்முக்கு அறுவை சிகிச்சை!

Delhi India Draupadi Murmu
By Sumathi Oct 16, 2022 01:47 PM GMT
Report

அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து திரெளபதி முர்மு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

திரெளபதி முர்மு

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, இந்தாண்டு ஜூலை 25ஆம் தேதி, இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக பதவியேற்று கொண்டார். இவர் இடது கண்ணில் கண்புரை காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார்.

ஜனாதிபதி திரெளபதி முர்முக்கு அறுவை சிகிச்சை! | Droupadi Murmu Undergoes Cataract Surgery

இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் உள்ள கான்ட் ராணுவ மருத்துவமனையில் மூத்த மருத்துவர் பிரிக் எஸ்.கே மிஸ்ரா தலைமையிலான குழு குடியரசு தலைவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து முடித்துள்ளதாக ராணுவ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை

மேலும், காலை 11.30 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை சில மணி நேரங்ககளில் முடிவடைந்த நிலையில் பிற்பகல் 1.30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு குடியரசு தலைவர் மாளிகை திரும்பியுள்ளார்.

கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அடுத்த சில வாரங்களுக்கு ஓய்வு எடுக்கும்படி ராணுவ மருத்துவமனை தரப்பில் குடியரசு தலைவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.