அக்னிபாத் எதிரொலி: சென்னையில் வலுக்கும் போராட்டம்!
அக்னிபாத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அக்னி பாத் திட்டம்
இந்திய ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்க மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னி பாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
6 மாத பயிற்சிக்குப்பின்னர் 4ஆண்டுகள் மட்டுமே இவர்கள் ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் பணிக்காலம் முடிந்து தேர்வுசெய்யப்படும்
கடும் எதிர்ப்பு
25சதவீதம்பேர் மட்டுமே நிரந்தர பணிக்கு சேர்த்துக்கொள்ளப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இளைஞர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் போராட்டம்
அக்னி பாதை ராணுவ ஆள் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
ஆரணி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த இளைஞர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போர் நினைவுச்சின்னம் முன்பு இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில் போலீசார் அங்கு பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடவும் முயற்சி என தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இளைஞர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் வெடித்த அக்னிபாத் போராட்டம்