அமெரிக்க அரசின் ஆணவம்..ஆதரிக்கும் மத்திய அரசு -முத்தரசன் திடீர் அறிவிப்பால் பரபரப்பு!

Donald Trump Tamil nadu Government Of India
By Vidhya Senthil Feb 13, 2025 11:00 AM GMT
Report

அமெரிக்க அரசின் ஆணவச் செயலையும், அதனை ஆதரித்து பேசும் மத்திய அரசின் நிலையினையும் கண்டித்துமுத்தரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அமெரிக்க அரசு

கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அரசு தலைவர் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக்கி வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் குஜராத், ராஜஸ்தான், அரியாணா மாநிலங்களை சேர்ந்த 104 இந்தியர்கள் கைகள், கால்களில் விலங்கிட்டு,

அமெரிக்க அரசின் ஆணவம்..ஆதரிக்கும் மத்திய அரசு -முத்தரசன் திடீர் அறிவிப்பால் பரபரப்பு! | Protest Against The Arrogant Act Of The Us

ராணுவ விமானத்தில் ஏற்றி, பஞ்சாப் அமிர்தசரஸ் விமானம் நிலையத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர். அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்துப் பொருட்களின் மீதும் அவர்கள் விருப்பப்படி, இந்தியாவில் இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என நிர்பந்தித்து வருகிறார்.

பாஜக ஒன்றிய அரசும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்கள்,செயற்கை சுவையூட்டிகள் மீதான இறக்குமதி வரியை வெகுவாக குறைத்து தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை காட்டியுள்ளது. அங்கீகரிக்கப்படாத குடியேறிகளுக்கும், தற்காலிக விசாவில் அமெரிக்கா செல்பவர்களுக்கும், அங்கு குழந்தைகள் பிறக்கும் போது,

முத்தரசன் திடீர் அறிவிப்பு

அந்தக் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கி வந்த நடைமுறையை கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். புலம் பெயர்ந்து செல்வோர் மற்றும் அடைக்கலம் புகுந்தோர்களின் சர்வதேச சட்டங்களை அமெரிக்க அரசு அப்பட்டமாக மீறி வருகின்றது.

அமெரிக்க அரசின் ஆணவம்..ஆதரிக்கும் மத்திய அரசு -முத்தரசன் திடீர் அறிவிப்பால் பரபரப்பு! | Protest Against The Arrogant Act Of The Us

இரண்டாவது முறையாக அதிகாரத்தை கைப்பற்றியுள்ள டொனால்டு டிரம்ப் அதிகார மமதையில், ஆவணத் திமிரோடு, இந்தியர்கள் மீது எதிர் நடவடிக்கைகளை தீவிரமாக்கி வருவதை நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு தெரிவிக்கும் போது, அயலுறவுத்துறை அமைச்சர் அமெரிக்காவிற்கு ஆதரவாக பேசுகிறார்.

அமெரிக்க அரசின் ஆணவச் செயலையும், அதனை ஆதரித்து பேசும் மத்திய அரசின் நிலையினையும் கண்டித்து நாளை 14.02.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.