தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக.. விஜய் மீது நம்பிக்கை இல்லை-பெ.சண்முகம்!
தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக விஜய் வருவார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என பெ.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அவர்களுக்கு அக்கல்லூரி சார்ப்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பெ.சண்முகம் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசியவர்,’’டெல்லி மாநில தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை வருத்தத்தையும் அளிக்கிறது.தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாக பா.ஜ.க. வெற்றி பெற்று வருகிறது. இதனைக் கூட்டணி இதனை உணர்ந்து செயல்பட ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
நம்பிக்கை இல்லை
மேலும் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பதுபோல் மற்ற மாநிலங்களில் இல்லை என்று கூறினார். மீண்டும் இந்தியா கூட்டணி வலுப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணையாக நிற்கும் எனத் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் சிலர் தமிழக அரசியலில் சினிமா பிரபலங்கள் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக விஜய் வருவார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினார். இதற்கு அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறினார்.