மணிப்பூர் விவகாரம், கல்லூரி மாணவர்கள் ரயில் மறிப்பு - வெடிக்கும் போராட்டம்!
மணிப்பூரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கலவரம்
மணிப்பூரில் சில மாதங்களாகவே பழங்குடியின மக்களுக்கும் மேல்தட்டு மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்து வந்தது. தற்பொழுது பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து இழுத்து செல்லும் காணொலி இணையத்தில் வைரலானது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், இதில் முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதில் தொடர்புடைய நபர்களை தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டம்
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக பிரதமர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக சென்னையில் உள்ள மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிருத்தப்பட்டன.
மேலும், ரயில்வே காவல்துறையினர் மற்றும் மீனம்பாக்கம் காவல் துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு உடன்படாத மாணவர்கள் போராட்டத்தை கைவிடாமல் நடத்தினர், அதனால் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
பெண்களுக்கு எதிரான நெஞ்சைப் பதற வைக்கும் இக்கொடுமையைக் கண்டித்து, வரும் ஜூலை 23-ம் தேதி அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 4 மணியளவில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, எம்.பி. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஜூலை 24-ம் தேதி காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.