லாக்டவுன்: திக்குமுக்காடும் சீனா - தெருக்களில் இறங்கி மக்கள் போராட்டம்!

COVID-19 China
By Sumathi Nov 28, 2022 08:30 AM GMT
Report

கொரோனா பரவலினால் லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா

சீனாவில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

லாக்டவுன்: திக்குமுக்காடும் சீனா - தெருக்களில் இறங்கி மக்கள் போராட்டம்! | Protest Across Cities China Against Lockdown

இதன் காரணமாக மாகாணத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில், பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். பொது மக்கள் இந்த வாரம் வரை வீடுகளை விட்டு வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,

போராட்டம்

கொரோனா பரிசோதனைக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றை மூடும்படி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், மக்கள் மத்தியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைக்கு எதிராக கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஷாங்காய் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். மேலும், ஜி ஜிங்பிங் பதவி விலக வேண்டும், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி கலைய வேண்டும் என கோஷங்களை எழுப்புகின்றனர்.