தாத்தாவின் சொத்தில் யாருக்கு உரிமை - மகனுக்கா? பேரனுக்கா?
குடும்பத்து உறுப்பினர்களிடையே சொத்துக்கள் பிரிப்பது தொடர்பாக சட்டங்கள் உள்ளன.
தாத்தா சொத்து
இந்திய சட்டப்படி, தாத்தாவின் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தில் பேரனுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. மூதாதையர்கள் சொத்தில் பேரனுக்கு உரிமை உள்ளது என்பது சரிதான்; பேரன் பிறக்கும் போதே,
தனது தாத்தா அவருடைய மூதாதையர்களிடம் இருந்து பெற்ற சொத்துக்கள் அனைத்தும் அவனுக்கு உரிமையாகின்றன. ஆனால் தாத்தா இறந்ததும் பேரனுக்கு உடனடியாக இதில் பங்கு கிடைக்காது.
மகனுக்கா? பேரனுக்கா?
ஒருவேளை பேரனின் தாத்தா, தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சொத்துக்கள் ஏதாவது வாங்கியிருந்தால், அந்த சொத்துக்களை அவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதற்கு பேரனால் எந்த எதிர்ப்பும் காட்ட முடியாது.
நபர் உயில் எதுவும் எழுதாமல் இறந்துவிட்டால், அப்போதுதான் அவரது உடனடி சட்ட வாரிசுகளான மனைவி, மகள், மகன் ஆகியோர் அவரது சுய சம்பாத்திய சொத்துகளுக்கு உரிமை கோர முடியும். இதில் பேரனுக்கு எந்தப் பங்கும் கிடைக்காது.
ஒருவருடைய தாத்தா இறந்துவிட்டால், அந்த தாத்தாவின் சொத்து முதலில் பேரனின் தகப்பனாருக்கே செல்லும்; பேரனுக்கு அல்ல. அதன்பிறகே தகப்பனிரிடமிருந்து மகனுக்கு கிடைக்கும்.
ஒருவேளை தாத்தா இறப்பதற்கு முன்பே அந்த நபரின் தந்தை இறந்துவிட்டால், அப்போதுதான் தாத்தாவின் சொத்து பேரனுக்கு நேரடியாக கிடைக்கும்.