பெண்ணை அடித்து உதைத்து பாலியல் தொல்லை - பேராசிரியர் கொடூர செயல்!
பெண்ணை, அடித்து உதைத்து பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சரமாரி தாக்குதல்
சென்னை, மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் அப்பகுதியில் மொபைட்டில் வந்துள்ளார். அப்போது அவரை தொடர்ந்து பைக்கில் வந்த நபர் அந்த பெண்ணின் பைக்கில் மோதினார்.
அதில் தடுமாறி கீழே விழுந்த பெண், சாலையில் தேங்கியிருந்த மழைநீரால் கைகளை சுத்தம் செய்துள்ளார். அப்போது அந்த நபர், அவருக்கு உதவுவது போல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
நடந்தது என்ன?
இதனால் அந்த பெண் அந்த நபரை தாக்கி தப்ப முயன்றுள்ளார். அதில் ஆத்திரமடைந்த நபர் பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் தலையைப் பிடித்து இரும்பு கேட்டில் இடித்து கீழே தள்ளி கைகளால் அவரது வயிற்றில் குத்துவிட்டு தப்பித்து சென்றுள்ளார்.
அதனையடுத்து அந்தப்பெண் போலீஸில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவியை ஆய்வு செய்ததில், தமிழ்ச்செல்வன்(35). குன்றத்தூர் தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை செய்வது தெரிய வந்தது. இவருக்கு 2018ஆம் ஆண்டு திருமணம் ஆகி 20220ல் விவாகரத்து ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.