எனக்கு உன் அம்மா வயசு: பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்கள் - பிரபல நடிகை பரபர தகவல்

Tamil Cinema Sexual harassment Indian Actress
By Sumathi Nov 10, 2022 07:30 PM GMT
Report

மகன் வயது தயாரிப்பாளர்கள் தன்னை அட்ஜெஸ்ட் செய்ய சொன்னதாக நடிகை சர்மிளா பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

 நடிகை சர்மிளா

90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சர்மிளா. நல்லதொரு குடும்பம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சர்மிளா. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

எனக்கு உன் அம்மா வயசு: பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்கள் - பிரபல நடிகை பரபர தகவல் | Actress Charmila Opens Up About Her Experience

தற்போது 48 வயதாகும் இவர், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி திரைப்படத்தில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ், மலையாளம் என 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

அட்ஜெஸ்ட்மெண்ட்!

இந்நிலையில் பேட்டி ஒன்றை சமீபத்தில் அளித்துள்ளார். அதில், ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து கொண்டிருந்துள்ளார். அந்தப் படத்தில் தயாரிப்பாளராக 24,25 வயதில் 3 இளைஞர்கள் இருந்துள்ளனர்.  3வது நாள் படப்பிடிப்பில் இவரிடம் வந்து எங்களில் ஒருவரை நீங்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டுமென கேட்டுள்ளார்.

எனக்கு உன் அம்மா வயசு: பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்கள் - பிரபல நடிகை பரபர தகவல் | Actress Charmila Opens Up About Her Experience

அதற்கு சர்மிளா, இன்னும் கொஞ்ச நாளில் என் மகனுக்கெ உங்கள் வயது வந்துவிடும். நீங்கள் என்னை அம்மாவாக பார்க்க வேண்டும். இப்படி பேசுவது சரியில்லை என மறுத்துள்ளார்.

ஆனால், தொடர்ந்து அவர்கள் தொல்லை கொடுக்கவே படத்தில் இருந்து விலகி விட்டதாக பரபரப்பு தகவலை பகிர்ந்துள்ளார்.