ரயிலில் தூங்கிய பெண் வக்கீலிடம் வேலையை காட்டிய பேராசிரியர் - அதிரடி காட்டிய வழக்கறிஞர்!
பெண் வக்கீயில் ஒருவருக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விரைவு ரயில்
கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் புதுக்கோட்டையை சேர்ந்த, 26 வயதான பெண் வழக்கறிஞர் ஒருவர் கோவையில் இருந்து பயணம் செய்துள்ளார்.
அதே ரயிலில் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த சந்திர பிரசாத் (33) என்பவரும் திருப்பூரில் இருந்து வந்தார். திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை அந்த ரயில் கடந்ததும், திருச்சி ரயில் நிலைய சந்திப்பில் அந்த நபர் இறங்குவதற்காக கிளம்பினார். அப்பொழுது அந்த பெண் வக்கீல் அவர் தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக புகாரளித்தார்.
அதிரடி கைது
இந்நிலையில், அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது சந்திர பிரசாத், திருச்சி சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது.
பின்னர், திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை தொடர்ந்து, நீதிபதி அவரை 30ம் தேதிவரை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பிறகு அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.