தலைக்கேறிய போதை..மாணவியை மது விருந்துக்கு அழைத்த பேராசிரியர் - அடுத்து நடந்த சம்பவம்!

Tamil nadu Crime Tirunelveli
By Swetha Sep 14, 2024 11:10 AM GMT
Report

கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்ததாக தனியார் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

பேராசிரியர் 

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் முன்னணி கல்லூரியில் மாணவி ஒருவர் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். அந்த கல்லூரியின் பேராசிரியர்கள் இரண்டு பேர் சம்பவத்தன்று மது அருந்தி போதை தலைக்கேறிய நிலையில்,

தலைக்கேறிய போதை..மாணவியை மது விருந்துக்கு அழைத்த பேராசிரியர் - அடுத்து நடந்த சம்பவம்! | Professor Got Arrested For Calling Girl For Party
 சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியின் செல்போனுக்கு கால் செய்துள்ளனர். கல்லூரி மாணவியிடம், 2 ஆசிரியர்களும் விரும்பத்தகாத வகையில் பேசியதோடு மது குடிப்பதற்கும் அழைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, நடந்த சம்பவங்கள் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

தலைக்கேறிய போதை..பள்ளிக்கு வந்த மாணவி செய்த செயல் - அதிர்ச்சியில் ஆசிரியர்கள்!

தலைக்கேறிய போதை..பள்ளிக்கு வந்த மாணவி செய்த செயல் - அதிர்ச்சியில் ஆசிரியர்கள்!

மாணவி

இதையறிந்து ஆத்திரம் அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், விசாரணையை தொடங்கிய போலீசார், பேராசிரியர்களான பால்ராஜ் மற்றும் ஜெபஸ்டின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைக்கேறிய போதை..மாணவியை மது விருந்துக்கு அழைத்த பேராசிரியர் - அடுத்து நடந்த சம்பவம்! | Professor Got Arrested For Calling Girl For Party

இதில் ஜெபஸ்டின் என்ற பேராசிரியரை போலீசார் கைதுசெய்துள்ளனர். பால்ராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேராசிரியர்களையும் கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.