தலைக்கேறிய போதை..பள்ளிக்கு வந்த மாணவி செய்த செயல் - அதிர்ச்சியில் ஆசிரியர்கள்!

Tamil nadu Viluppuram
By Swetha Sep 13, 2024 03:51 AM GMT
Report

மாணவி ஒருவர் மது அருந்தி பள்ளிக்கு வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதை..

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் 11ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் மது குடித்துவிட்டு வகுப்புக்கு வந்துள்ளார்.

தலைக்கேறிய போதை..பள்ளிக்கு வந்த மாணவி செய்த செயல் - அதிர்ச்சியில் ஆசிரியர்கள்! | A Girl Came Drunk To School Teachers Were Shocked

போதை தலைக்கேறிய மாணவிக்கு திடீரென தலைசுற்றல் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த மாணவி, தன்னிலை மறந்து சக மாணவர்களையும், ஆசிரியரையும் பார்த்து ஆவேசமாக திட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவியின் பெற்றோர் மற்றும் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, போலீசார் பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினார்.

மேஜிக் காளானை தேடி வராதீங்க.. இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டி.எஸ்.பி!

மேஜிக் காளானை தேடி வராதீங்க.. இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டி.எஸ்.பி!

ஆசிரியர்கள்

அப்போது, அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரும், இந்த மாணவியும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று அந்த மாணவருக்கு பிறந்தநாள் என்பதால், அவர் சக மாணவர்களுக்கு மது விருந்து கொடுத்துள்ளார். எனவே அந்த மாணவி குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்த போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தலைக்கேறிய போதை..பள்ளிக்கு வந்த மாணவி செய்த செயல் - அதிர்ச்சியில் ஆசிரியர்கள்! | A Girl Came Drunk To School Teachers Were Shocked

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், தனது மகளுக்கு மது வாங்கி கொடுத்த மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.