கட்டிப்பிடி வைத்தியம் செய்யும் பெண்; ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வருமானம் தெரியுமா ?
தொழில்முறை அரவணைப்பாளரான அனிகோ ரோஸ் என்பவர் கட்டிப்பிடி வைத்தியம் மூலம் ஒரு மணி நேரத்தில் ரூ.7400 சம்மதித்துள்ளார்
கட்டிப்பிடி வைத்தியம்
இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரைச் சேர்ந்த 42 வயதான அனிகோ ரோஸ் என்பவர் கட்டிப்பிடி வைத்தியத்தை செய்தே பெரும் பணம் சம்பாதித்து வருகிறார்.
ஒரு தொழில்முறை அரவணைப்பாளரான இவர், ஒரு நபரை அரவணைப்பதன் மூலம் அவரது மன அழுத்தங்கள் குறைவதால் இதை தன் தொழிலாக செய்து ஒரு மணி நேரத்திற்கு £70 கிட்டதட்ட 7400 ரூபாய் வரை வசூலிக்கிறார்.
அனிகோ ரோஸ் இதை மூன்று ஆண்டுகாலமாக செய்து வருவதாக கூறியுள்ளார். இதன்படி, ஓருவர் மன அழுத்தம், தனிமை மற்றும் பதற்றம் உள்ளிட்ட மன ஆரோக்கியத்துடன் போராடுபவர்களானால் அவர்களுக்கு "Act of Touch" மூலம் குணப்படுத்த முடியும் என கூறுகிறார்.
எவ்வளவு வருமானம்
அவரது கூற்றுப்படி, ஒரு நல்ல அரவணைப்பு உணர்வு-நல்ல ஹார்மோன்களை வெளியிட்டு நரம்பு மண்டலத்தை அமைதி படுத்துகிறது. ஒருவரை கட்டி அணைக்கும்போது "மகிழ்ச்சியான ஹார்மோன்" சுரக்கிறது. இதனால் ஒருவருக்கு சந்தோஷம் மற்றும் பாதுகாப்பான உணர்வுகளைத் தூண்டுகிறது.
மேலும், இது அறிவியல்ரீதியாக மனஅழுத்தத்தை குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது இது குறித்து அனிகோ பேசுகையில், இது மிகவும் பலனளிக்கும் வேலை - அதனால்தான் நான் அதை செய்கிறேன், அணைப்பது அல்லது கைகளைப் பிடித்துக் கொள்ளும் போது ஏற்படும் தொடுதல் ஒரு இனிமையான விளைவைக் கொண்டிருக்கிறது.
இந்த அமைதியான விளைவின் காரணமாக, தொடுதல் உங்கள் இதயதுடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைக்கும் மற்றும் வலியைக் குறைக்கும்.
இந்த சிகிச்சை பற்றி கேள்வி பட்டவுடன் அனைவரின் மனதிலும் பாலியல்ரீதியான சிந்தனைகள் எழும். ஆனால், இது ஒரு சர்ச்சைக்குரிய சிகிச்சையாகத் தோன்றினாலும், தனிப்பட்ட அரவணைப்பு அமர்வுகள் பாலியல்ரீதியானவை அல்ல என்று அனிகோ தெரிவித்துள்ளார்.