திருமணத்தில் விருப்பமில்லையா..கவலை வேண்டாம் - trending wedding destroyer தெரியுமா?
திருமணத்தை நிறுத்துவதையே தொழிலாகக் கொண்டு ஒருவர் இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
விருப்பமில்லையா..
உலகம் முழுவதும் திருமணம், சரியான துணை என்பது, தங்களது வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. அதுவும் விவாகரத்து அதிகம் நடக்கும் இந்த காலகட்டத்தில், ஒத்துவராத திருமணத்தில் இருந்து முன்பே விலகுவதும் மிக மிக முக்கியம்தான்.
அப்படி விருப்பம் இல்லாமல் ஒரு உறவில் இறங்க மனமில்லாமல் தவிக்கும் பெரும்பாலான பெண்கள் தவித்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில், ஸ்பெயினில் உள்ள நபர் ஒருவர் திருமணத்தை நிறுத்துவதையே தொழிலாகக் கொண்டு இருக்கிறார்.
அதுவும் விருப்பத்தில் பேரில் மட்டுமே என்ற விதியின்படி. அதாவது, ஸ்பெயினைச் சேர்ந்தவர் எர்னஸ்டோ ரெய்னாரெஸ் வரேயா. திருமணத்தைத் திட்டமிடும் தொழிலைச் செய்துவந்தவர். “உங்களுக்கு திருமணத்தின்மீது விருப்பம் இல்லையா அல்லது சந்தேகமாக இருக்கிறதா?
அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்று தெரியவில்லையா? கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன்?” இதுதான் வரேயாவின் விளம்பரம். இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால்,
wedding destroyer
அந்த விளம்பரத்தைக் கண்டு திருமணத்தை நிறுத்தச் சொல்லி ஏகப்பட்ட அழைப்புகள் வந்ததுதான். விளையாட்டுத்தனமாக வெளியிட்ட விளம்பரம் முழு வேலையாகவே மாறிப்போனது. அவர் தன்னை wedding destroyer என்றே அழைத்துக் கொள்கிறார்.
இதனை தொடர்புகொள்பவர்கள் திருமணத்தில் விருப்பம் இல்லாதவர் வரேயாவிடம் திருமணம் நடைபெறும் நாள், நேரம், இடம் மூன்று தகவல்களையும் கொடுத்துவிடுவார்கள். கட்டணமாக, 500 யூரோ கொடுத்தால்போதும்.
இந்திய மதிப்பில் சுமார் 47 ஆயிரம் ரூபாய் ஆகும். அப்படி பூக் ஆனதும், நாடகங்கள் நடத்தி திருமணத்தை நிறுத்திவிடுவார். அதிலும் கூடுதலாக ப்ரீமியம் சேவையும் உண்டு. குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது கை நீண்டு ஒரு அறை கொடுத்துவிட்டால்,
அறை ஒன்றுக்கு 50 யூரோ கூடுதலாக கொடுக்க வேண்டும். மேலும், டிசம்பர் வரை வரேயா சார் செம்ம பிஸி.. அத்தனை திருமணங்களை நிறுத்த வேண்டி இருக்கிறது. தலைவர்தான் தற்போது ட்ரெண்டிங் நபர்.