பெண்களுக்கு திருமண வயது 9; அரசு அனுமதி - கொதிக்கும் மக்கள்!

Marriage Iraq
By Sumathi Aug 09, 2024 08:45 AM GMT
Report

9 வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

குழந்தை திருமணம்

ஈராக் நாட்டில் பெண்களின் திருமண வயது 18 ஆக இருந்தது. தற்போது இயற்றப்பட்டுள்ள புதிய மசோதாவின் படி, ஆண்களுக்கு 15 வயதிலும் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பெண்களுக்கு திருமண வயது 9; அரசு அனுமதி - கொதிக்கும் மக்கள்! | Marriage Allowed For Nine Years Old Girl Iraq

அதன்படி, பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்துடன் ஒன்பது வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம் என சட்டமயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளி சிறுமிகளுக்கு பிரசவம்; குழந்தைகள் திருமணம் - திணறும் தமிழக மாவட்டம்!

பள்ளி சிறுமிகளுக்கு பிரசவம்; குழந்தைகள் திருமணம் - திணறும் தமிழக மாவட்டம்!

வலுக்கும் கண்டனங்கள்

இதனைத் தொடர்ந்து ஈராக் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

iraq protest

முன்னதாக, ஏற்கனவே ஈராக்கில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக ஐநா குழந்தைகள் அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.