அதை செய்.. இல்ல வாய்ப்பு கிடைக்காது.. மிரட்டிய தயாரிப்பாளர்கள் - மானசி பரேக் ஓபன்டாக்!
திருமணம் செய்தால் சினிமா வாய்ப்புகள் பறிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் கூறியதாக நடிகை மானசி தெரிவித்துள்ளார்.
மானசி பரேக்
குஜராத்தி நடிகையான மானசி பரேக் தமிழ் சினிமாவில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான ‘லீலை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதில் இடம்பெற்ற ‘ஒரு கிளி ஒரு கிளி’ பாடல் பலரது விருப்பான பாடலாக இன்று வரை உள்ளது.
பின்னர் 2019 ஆண்டு வெளியான ‘உரி, தி சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதை தொடர்ந்து, மானசி, ‘கட்ச் எக்ஸ்பிரஸ்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றுள்ளார்.
வாய்ப்பு
இதனிடையே, இசையமைப்பாளர் பார்த்திவ் கோஹிலை திருமணம் செய்துள்ளார். ஆனால் அந்த சமயம், சினிமாவில் வளர்ந்து வரும் போது திருமணம் செய்ய வேண்டாம் என்று முன்னணி தயாரிப்பாளர்கள் தன்னை அச்சுறுத்தியதாக மானசி பரேக் தெரிவித்துள்ளார்.
திருமணமானால் உடல் பருமனாகி விடும் என்றும், அதனால் சினிமா வாய்ப்புகள் கையை விட்டுப் பறிபோகும் எனவும் எச்சரித்ததாகக் கூறியுள்ளார். மேலும், வளர்ந்து வரும் நேரத்தில் திருமணம் செய்தால்,
சரிவை சந்திக்க நேரிடும் எனவும் கூறிப் பீதியைக் கிளப்பியதாகவும் தெரிவித்துள்ளார். இருந்த போதும், தயாரிப்பாளர் மற்றும் சக நடிகை, நடிகர்கள் கூறியதைப் பொய்யாக்கும் வகையில் திருமணத்திற்குப் பின்னரே தான் சாதித்துக் காட்டியுள்ளேன் என பெருமிதமாக தெரிவித்துள்ளார்.