மீனாவிடம் சில்மிஷம்; விளாசிய விஜயகாந்த் - போட்டுடைத்த தயாரிப்பாளர்

Vijayakanth Meena Tamil Cinema
By Sumathi Jan 02, 2025 05:30 PM GMT
Report

தயாரிப்பாளர் சிவா விஜயகாந்த் குறித்து பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயகாந்த்

தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகர் விஜயகாந்த். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தார். இவர் கடந்த வருடம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

meena - vijayakanth

அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் விஜயகாந்த் குறித்து தயாரிப்பாளர் சிவா பேட்டி ஒன்றில் பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது. அதில் பேசிய அவர், ”விஜயகாந்த் எப்போதும் படத்தில் மட்டும் கேப்டனாக இருந்ததில்லை.

எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அவர் எப்போதும் கேப்டனாகத்தான் இருந்திருக்கிறார். தனியாளாக பல வேலைகளை செய்திருக்கிறார். நட்சத்திர கலை விழாவை அவர்தான் முன்னெடுத்து நடத்தினார். அந்த நட்சத்திர கலை விழாவின்போது மீனா உயிரோடு வந்ததற்கு காரணமே விஜயகாந்த்தான்.

நயன்தாரா ரொம்ப மோசம்; எங்க பாத்தாலும் அடிப்பேன் - பிரபுதேவா முன்னாள் மனைவி!

நயன்தாரா ரொம்ப மோசம்; எங்க பாத்தாலும் அடிப்பேன் - பிரபுதேவா முன்னாள் மனைவி!

மீனாவிடம் சில்மிஷம்

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லும்போது ஹோட்டல் வாசலில் 1000 பேர் கூடி நின்றார்கள். போலீஸ் பாதுகாப்பு அவ்வளவாக இல்லை. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த சமயத்தில் விஜயகாந்த், நெப்போலியன், சரத்குமார் என மூன்று பேர் சேர்ந்து நடிகைகளின் லக்கேஜுகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

producer siva

அப்போது யாரோ ஒருவர் ஹெல்மெட் போட்டுக்கொண்டு மீனா அருகே வந்து தவறாக நடந்துகொள்ள முயன்றார். ரொம்பவே மோசமாக நடந்துகொள்ள ட்ரை செய்தார். மீனாவிடம் சில்மிஷம் செய்ய வந்த அவரை விஜயகாந்த் கவனித்துவிட்டார். உடனே அந்த நபரிடம் வேகமாக நெருங்கி ஹெல்மெட்டை அப்படியே தூக்கிவிட்டு மண்டையில் செமயாக அடித்துவிட்டார்.

அந்த நபருக்கு ரத்தம் கொட்ட தொடங்கிவிட்டது. அதனைப் பார்த்து தள்ளுமுள்ளு செய்தவர்கள் அத்தனை பேரும் பயந்து ஓடிவிட்டார்கள். அதற்கு பிறகுதான் நடிகைகளை அந்த வாகனத்தில் பத்திரமாக அழைத்து வர முடிந்தது எனத் தெரிவித்துள்ளார்.