விஜய் வந்தா நான் ஏன் எழுந்து நிற்கணும்? சர்ச்சைக்கு பாலா பளீச் விளக்கம்!
இயக்குனர் பாலா விஜய் குறித்து பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
இயக்குனர் பாலா
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய்யின் நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதனை முன்னிட்டு பாலா ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இதற்கிடையில், சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற விருது விழா ஒன்றி விஜய் வருகை தருகையில், இளையராஜா, கமல்ஹாசன், விஜய் சேதுபதி என அங்கிருந்த பலரும் எழுந்து நின்று அவருக்கு கைகொடுப்பார்கள்.
ஆனால் அதே இடத்தில இருந்த பாலா எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருப்பார். அந்த வீடியோ இணையத்தில் படு வைரலானது. இந்நிலையில் இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பாலவே விளக்கம் கொடுத்துள்ளார். அது கவனக்குறைவால் நடந்த ஒரு விஷயம்.
சர்ச்சைக்கு பதில்
அதை சிலர் சர்ச்சையாக்கிவிட்டனர். இருந்தாலும் நான் ஏன் எழுந்து நிக்கணும். விஜய் என்னைவிட வயதில் சிறியவர் தானே. இருந்தாலும் விஜய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒருமுறை நானும் எனது குடும்பத்தினரும் ஒரு நிகழ்ச்சியில் சென்ற போது, விஜய் அங்கு இருந்தார்.
அப்போது என் மகள் அவருடைய மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டார். அதை பார்த்த விஜய், என்னிடம் ஒரு செல்பி எடுத்துக் கொள்ளட்டுமா என்று அனுமதி கேட்டார். அப்படி ஒரு டிசிப்ளினான ஒருவரை நான் எப்படி அவமானப்படுத்துவேன்.
பல இடத்தில் பலவிதமான கருத்துக்கள் என்னை பற்றி வருகின்றன அவற்றுக்கெல்லாம் நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் யார் என்று எனக்குத் தெரியும் எனத் தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.