அல்லு அர்ஜுன் கூட அந்த டான்ஸில் அப்படி இருந்தது - ராஷ்மிகா ஓபன்டாக்!
அல்லு அர்ஜுன் கூட சேர்ந்து நடனமாடியது குறித்து ராஷ்மிகா தகவல் பகிர்ந்துள்ளார்.
ராஷ்மிகா
புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில், `வந்துச்சே பீலிங்கு" பாடலின் நடனங்களுக்காக ராஷ்மிகா மந்தனா கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இந்நிலையில் இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "புஷ்பா படம் வெளியீட்டிற்குச் சில நாள்களுக்கு முன்புதான் அந்தப் பாடல் படமாக்கப்பட்டது. ஐந்து நாளில் அந்தப் பாடல் எடுத்து முடிக்கப்பட்டது.
அந்தப் பாடலின் படப்பிடிப்பின்போது அல்லு அர்ஜுன் மீது ஏறி நின்று நடனமாடும் காட்சி இருக்கும். அதற்குப் பயம் காரணமாகச் சங்கடமாக உணர்ந்தேன். இதை எப்படிச் செய்யப் போகிறேன்? என்ற எண்ணம் சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால், இந்தப் பாடல் படத்துக்கு அவசியம் என்பதையும் புரிந்துகொண்டேன்.
பீலிங்கு பாடல் சர்ச்சை
எனது இயக்குநர் மற்றும் அல்லு அர்ஜுன் சார் மீது நம்பிக்கை வைத்து நடித்தேன். ஒரு நடிகையாக, படத்தில் எனது இயக்குநரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதே தனது பாத்திரம். எனது வேலையைச் செய்யவே வந்திருக்கிறேன். என் இயக்குநர் என்னைச் சிறப்பு எனப் பாராட்ட வேண்டும்.
அதற்காகத்தான் நான் வேலை செய்கிறேன். அதுதான் எனக்கு முக்கியமானது. அதுதான் ரசிகர்களையும் மகிழ்விக்கும்" எனத் தெரிவித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து ராஷ்மிகா நடிப்பில் தி கேர்ள்பிரண்ட், சாவா, சிக்கந்தர், குபேரா ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.