அந்த ரூம்ல ஜன்னல் கூட இல்ல.. சுகன்யா அட்ஜஸ்ட் பண்ணாங்க - போட்டுடைத்த பிரபலம்!

Sukanya Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jun 06, 2024 03:38 PM GMT
Report

நடிகை சுகன்யா குறித்து பிரபல தயாரிப்பாளர் பேசியுள்ளார். 

நடிகை சுகன்யா

'புது நெல்லு புது நாத்து' என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுகன்யா. தொடர்ந்து சின்ன கவுண்டர், செந்தமிழ் பாட்டு, தாலாட்டு, மகாநதி, இந்தியன், சேனாபதி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

அந்த ரூம்ல ஜன்னல் கூட இல்ல.. சுகன்யா அட்ஜஸ்ட் பண்ணாங்க - போட்டுடைத்த பிரபலம்! | Producer Shiva Reveals About Actress Sukanya

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பிற மொழிகளிலும் ஹிட் படங்களில் சுகன்யா நடித்துள்ளார். இவர் கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். நடிகை சுகன்யா குறித்து நேர்காணல் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசியுள்ளார்.

குழந்தை பெத்துக்கலாமா.. அத பண்ணலாமா; ஆண் சம்பந்தப்பட்டது - நடிகை அபிராமி பளீச்!

குழந்தை பெத்துக்கலாமா.. அத பண்ணலாமா; ஆண் சம்பந்தப்பட்டது - நடிகை அபிராமி பளீச்!

சுகன்யா செய்தார்

அவர் கூறுகையில் "நான் தயாரித்த சின்ன மாப்ளே படத்தின் ஷூட்டிங் கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது. அப்போது எல்லோரும் தங்குவதற்கு லாட்ஜில் ரூம் புக் செய்துவிட்டேன். ஆனால், ஒரு ரூம் மட்டும் நான் நினைத்தது போல் கிடைக்கவில்லை.

அந்த ரூம்ல ஜன்னல் கூட இல்ல.. சுகன்யா அட்ஜஸ்ட் பண்ணாங்க - போட்டுடைத்த பிரபலம்! | Producer Shiva Reveals About Actress Sukanya

நார்மல் ரூம் கூட கிடைக்காமல் கட்டி முடித்த ஒரு ரூமைத்தான் கொடுத்தார்கள். அந்த ரூமில் ஜன்னல் கூட இருக்கவில்லை. அந்த ரூமை சுகன்யாவுக்கு கொடுக்க வேண்டிய சூழல் அமைந்துவிட்டது. உடனே அவரது அம்மா, அப்பாவிடம் அந்த ரூமை காட்டினேன்.

அவர்கள் எதுவும் சொல்லாமல் அட்ஜஸ்ட் செய்துகொள்கிறோம் என்று கூறினார்கள். சுகன்யாவும் அதை சொன்னார். பிறகு அந்த ரூமிலேயே தங்கி படத்தில் நடித்துக்கொடுத்தார். இதை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கூட செய்யமாட்டார். ஆனால் சுகன்யா செய்தார்" என்று தெரிவித்துள்ளார்.