குழந்தை பெத்துக்கலாமா.. அத பண்ணலாமா; ஆண் சம்பந்தப்பட்டது - நடிகை அபிராமி பளீச்!

Abhirami Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jun 06, 2024 02:09 PM GMT
Report

தனது மகள் குறித்து நடிகை அபிராமி பேசியுள்ளார். 

நடிகை அபிராமி

வானவில் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. தொடர்ந்து தோஸ்த், கார்மேகம், விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் ராகுல் பவணன் என்பவரை கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

குழந்தை பெத்துக்கலாமா.. அத பண்ணலாமா; ஆண் சம்பந்தப்பட்டது - நடிகை அபிராமி பளீச்! | Actress Abhirami Talks About Her Baby

இதனிடையே சினிமாவில் இருந்து விலகியிருந்த அபிராமி தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். ராகுல் - அபிராமி தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், கல்கி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டனர். அபிராமி கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் "எனது மகள் பெயர் கல்கி.

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

தாய்மை 

அவள் எங்களுடைய வாழ்க்கையில் வந்ததுதான் மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம். அவளுக்கு இயற்கை என்றால் அவ்வளவு பிரியம். ரசிப்பாள். அவள் வந்தபிறகுதான் நிறைய பொறுமை வந்திருக்கிறது. தாய்மை என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் அபிப்ராயம்.

குழந்தை பெத்துக்கலாமா.. அத பண்ணலாமா; ஆண் சம்பந்தப்பட்டது - நடிகை அபிராமி பளீச்! | Actress Abhirami Talks About Her Baby

பத்து மாதங்கள் குழந்தையை சுமந்து பெற்றுக்கொள்ள வேண்டுமா இல்லை வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொள்ள விரும்புகிறாரா என்பது அந்த பெண் சம்பந்தப்பட்டது. அதுமட்டுமின்றி குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறார்களா என்பதும் அந்த பெண், ஆண் சம்பந்தப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.