லோகேஷ் கனகராஜை பிடிக்கவே இல்ல.. அவருக்கு அதுதான் நோக்கம்? போட்டுடைத்த பிரபலம்!
லோகேஷ் கனகராஜ் குறித்து பிரபல தயாரிப்பாளர் தகவல்கள் பகிர்ந்துள்ளார்.
மாணிக்கம் நாராயணன்
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர் மாணிக்கம் நாராயணன். மாண்புமிகு மாணவன், வேட்டையாடு விளையாடு, இந்திரலோகத்தில் நா அழகப்பன் போன்ற ஹிட் திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
தற்போது, படங்கள் தயாரிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில், இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், இளையராஜாவை அனைவரும் திமிர்பிடித்தவர் என்று சொல்கிறார்கள், என்னை பொருத்தவரை அவரிடம் ஒரு சதவீதம் கூட திமிர் இல்லை.
அவருடைய சாதனைக்கு அருகில் யாராலும் போகக்கூட முடியாது. அவரின் சாதனையை முறியடிக்க முடியாத, ஒன்னுமே தெரியாத துக்கடா பையன் ஏன் அவரை பற்றி பேச வேண்டும். இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா தான். இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜ் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ்
அவர் என்னை மிகவும் குழப்புகிறார். ஆனால், அவரை எனக்கு பிடிக்கவில்லை. அவரின் படங்களில் வன்முறை அதிகமாக இருக்கிறது. வயலன்ஸ் மட்டும் வாழ்க்கை கிடையாது, நாம் புத்தராக இருக்க வேண்டாம், இதற்காக வயலன்சாகவும் இருக்க வேண்டாம்.
நாம் பவர் புல்லான ஒரு மீடியாவில் இருக்கிறோம், அப்படி இருக்கும் போது இந்த சமூதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும். நாம ஜெயிக்க வேண்டும், காசு சம்பாதிக்க வேண்டும் என்று அஜித் போல இருக்கக்கூடாது.
இதற்காக பணம் சம்பாதிக்க கூடாது என்று நான் சொல்லவில்லை. என்னை பொறுத்தவரை நல்லவனாக வாழ வேண்டும், முடிந்தால் நல்லது செய்யுங்கள். ஆனால் நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.